Tuesday, January 28, 2025
HomeLatest Newsஇலங்கை வரும் தமது நாட்டு பிரஜைகளுக்கு நியூசிலாந்து விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை வரும் தமது நாட்டு பிரஜைகளுக்கு நியூசிலாந்து விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு நியூசிலாந்து அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன், எரிபொருள் பற்றாக்குறையால், பொது போக்குவரத்து, வாடகை வாகனம், உணவு விநியோகம் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துகொள்ளுமாறு நியூசிலாந்து அறிவுறுத்தியுள்ளது.

Recent News