Wednesday, December 25, 2024
HomeLatest Newsசந்தைக்கு வரும் நியு இயர் பரோட்டா! குவியும் மக்கள்

சந்தைக்கு வரும் நியு இயர் பரோட்டா! குவியும் மக்கள்

புத்தாண்டை வரவேற்கும் வகையில் பிரபல உணவகமொன்றில் 2023 என்ற வடிவமைப்பில் பரோட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வித்தியாசமாக பரோட்டா தயாரிக்கும் பிரபல ஹோட்டல்
மதுரையிலிருக்கும் பிரபல ஹோட்டலில் தினமும் வாய்க்கு ருசியான கறி தோசை, பிரியாணி, மட்டன் முட்டைக்கறி, வெங்காயக்கறி, இலை பரோட்டா, பொரிச்ச பரோட்டா என பல உணவுகளை தயார் செய்து விற்பனை செய்கிறார்கள்.

இந்நிலையில் இன்றைய தினம் ஆங்கில புத்தாண்டு தினத்தையோட்டி 2023 என தயார் செய்த பரோட்டாக்களை 23 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனையறிந்த ஊடகங்கள் குறித்த ஹோட்டலுக்கு சென்று பரோட்டாவின் புகைப்படங்கள் மற்றும் அந்த ஹோட்டலிலுள்ளவர்களிடம் பேட்டி எடுத்து சென்றுள்ளனர்.

உண்மைகளை உடைத்த உரிமையாளர்
அந்த பேட்டியில், ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு விதமான பரோட்டாக்கள் போடுவது வழக்கம்.

இதன்படி, கொரோனா காலப்பகுதியில் மாஸ்க் ப்ரோட்டாவும், தமிழக முதல்வர் மஞ்சப்பை பிரபலப்படுத்தும்போது மஞ்சள் பை ப்ரோட்டாவும் தயார் செய்து விற்பனை செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் குறித்த ஹோட்டலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Recent News