Thursday, January 23, 2025

இந்தியாவில் புதிய Xiaomi Pad 5 வெளியீடு

இந்தியாவில் சியோமி நிறுவனம் அடுதடுத்து புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட Mi Pad 5 இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பான பல உறுதிபடுத்தப்படாத தகவல்களும் இணையத்தில் கசிந்து வந்தது.

தற்போது, புதிய டேப்லெட் வெளியீடு குறித்து Xiaomi India தனது ட்விட்டர் பக்கத்தில் டீஸ் செய்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் தேதி இந்தியாவில் புதிய டேப்லெட் கணினியை சியோமி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Xiaomi Pad 5 அல்லது மி பேட் 5 என்ற பெயருடன் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.

கேமராவைப் பொருத்தவரை பின்புறம் 13MP மெகாபிக்சல் லென்ஸ் இதில் கொடுக்கப்பட்டிருக்கும். செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 8MP மெகாபிக்சல் லென்ஸ் இதன் டிஸ்ப்ளே பொசலில் பொருத்தப்பட்டுள்ளது.

Latest Videos