Monday, January 27, 2025
HomeLatest NewsWorld Newsபுர்ஜ் கலிஃபாவை தோற்கடிக்க கட்டப்படும் புதிய tower - 1 கிலோ மீட்டர் உயரத்தில் புதிய...

புர்ஜ் கலிஃபாவை தோற்கடிக்க கட்டப்படும் புதிய tower – 1 கிலோ மீட்டர் உயரத்தில் புதிய பிரமாண்டம் !!!

உலகிலேயே மிக உயரமான டவர் புர்ஜ் கலிஃபா ஆகும். இந்த டவர் ஐக்கிய அரபு நாடான துபாயில் இருக்கிறது. இப்போது இந்த தவரின் உயரத்தைவிட பல மடங்கு உயரமான டவர் ஒன்று சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வருகிறது.ஜெட்டா டவர் என அழைக்கப்படும் ‘கிங்டம் டவர்’ சுமார் 3,290 அடி உயரம் கொண்டதாகும். தோராயமாக 1 கிலோமீட்டர் உயரத்தில் இந்த கிங்டம் டவர் கட்டப்பட்டு வருகிறது.வடக்கு ஜெட்டாவில் செங்கடலை ஒட்டி 5.3 மில்லியன் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கிங்டம் சிட்டியில் கட்டிடம் கட்டப்படுகிறது. இது உலகின் முதல் ஒரு கிலோமீட்டர் உயரமான கட்டிடமாகவும் இருக்கும். இந்த வரலாற்றை மாற்றப்போகும் கிங்டம் டவர் சவுதி அரச குடும்பத்தை தலைமையிடமாகக் கொண்ட கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் கட்டி வருகிறது.

ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டல், அடுக்குமாடி குடியிருப்புகள், உலகத்தரம் வாய்ந்த அலுவலக இடம் மற்றும் கண்காணிப்பு தளம் ஆகியவற்றையும் இந்த ஜெட்டா டவர் என அழைக்கப்படும் கிங்டம் டவர் கொண்டிருக்கும்.மேலும் ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை உள்ளடக்கிய கிங்டம் டவரில் 80,000 பேர் தங்கும் வசதியும் இருக்கும்.காற்றின் எடை குறையும் வகையில் ஏரோடைனமிக் முறையில் வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன. கட்டிடத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருப்பது டைனமிக் லிப்ட் ஆகும் . இந்த லிப்ட் வினாடிக்கு 10 மீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த டவரின் கட்டுமானப் பணிகளுக்காக அந்நாடு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியது.

Recent News