டெங்கு பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் புதிய திரிபுடனான டெங்கு நோய் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஜீவ வாயு பீடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இதனைக் கவனத்திற்கொண்டு செயற்படுமாறு, டெங்கு நுளம்புஉற்பத்தியாகும் பகுதிகளை இனங்கண்டு அவற்றை ஒழிப்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு டெங்கு நோயிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் டெங்கின் புதிய திரிபு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டெங்கு நோய் தொடர்பில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுப்பது முக்கியமாகுமென்றும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.