இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நன்மைக்காகவும் அவர்களின் பாதுகாப்பை பலப்படுததுவதற்காகவும் சுற்றுலா மொபைல் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதிய செயலி நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த செயலி மற்ற நாடுகளில் சுற்றுலாத் துறையில் பயன்படுத்தப்படும் சிறந்த மொபைல் செயலிகளில் ஒன்றாகும். இதனை ஏழு மொழிகளில் செயற்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மொபைல் செயலி அனைத்து முச்சக்கர வண்டிகளையும் பதிவு செய்வதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஸ்கேன் செய்ய வாகனத்தில் பார் குறியீடு காட்டப்படும்.
இந்த செயலியை கண்காணித்து சந்தேகத்துக்கிடமான அல்லது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நாட்டின் சுற்றுலாத்துறையில் புதிய அத்தியாயம் திறக்கப்படுகிறது.
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், அதை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் வசதிகள் கொண்ட இந்தசெயலி, எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்