Tuesday, December 24, 2024
HomeLatest Newsபுதிய ஜனாதிபதித் தெரிவு நாளை; மூன்று வேட்பாளர்கள் களத்தில்!

புதிய ஜனாதிபதித் தெரிவு நாளை; மூன்று வேட்பாளர்கள் களத்தில்!

நாளைய தினம் இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பிற்கு, மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் இன்று நாடாளுமன்றில் பரிந்துரைக்கப்பட்டன.

நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய நிலையில், நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தன.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்தார்.

இதனை முன்னாள் அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.

இதனையடுத்து, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவின் பெயரை முன்மொழிந்தார்.

மானுஷ நாணயக்கார இதனை வழிமொழிந்ததோடு, ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவின் பெயரை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்மொழிந்திருந்தார்.

நாளை புதன்கிழமை, காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், நாளைய தினம் நாடாளுமன்றில் புதிய ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு, நாடாளுமன்றில் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News