கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளன.
ஒருமித்த கருத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் எவ்வித பிளவுகளும் இன்றி இருவரில் ஒருவரை நியமிப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை நுகேகொடையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவின் இல்லத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒன்பது கட்சிகளின் உறுப்பினர்கள் நேற்று மாலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன்போது ஒருவரை ஜனாதிபதியாகவும் மற்றையவரை பிரதமராகவும் நியமிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.