Tuesday, December 24, 2024
HomeLatest Newsபல சிறப்பம்சங்களுடன் புதிய மாடலான Vivo V29 Lite வெளியீடு..!

பல சிறப்பம்சங்களுடன் புதிய மாடலான Vivo V29 Lite வெளியீடு..!

புதிய மாடலான Vivo V29 Lite ஸ்மார்ட்போனை செக் குடியரசில் விவோ வெளியிட்டுள்ளது.

அத்துடன், விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா போன்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. .

இதன் சிறப்பம்சங்களை பொறுத்த மட்டில் விவோவின் முதல் மாடலான Vivo Y78 5G யுடன் ஒப்பிடுகையில் அதற்கு இணையான சிறப்பம்சங்கள் இந்த Vivo V29 Lite மாடலிலும் காணப்படுகின்றது.

அந்த வகையில், Vivo V29 Lite 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக 6.78 இன்ச் அமோலெட் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695 சிப்செட், 2.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 13, ஃபண்டச் ஓஎஸ், 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி / 256 ஜிபி இண்டர்னெல் மெமரி, 64 எம்.பி + 2 எம்.பி + 2 எம்.பி OIS ட்ரிப்பிள் கேமரா, 16 எம்.பி முன்பக்க செல்பி கேமரா, 5000 mAh பேட்டரி, மற்றும் 44W பாஸ்ட் சார்ஜிங் போன்றன காணப்படுகின்றன.

மேலும், இந்த Vivo V29 Lite 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் இதன் விலை 24,990 ரூபாயாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News