இலங்கையிலுள்ள 4 மாகாணங்களின், ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களையே இவ்வாறு இராஜினாமா செய்யுமாறே ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் கிழக்குமாகாண ஆளுநர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன் வடக்கு ஆளுநர் இது தொடர்பில் மௌனம் காத்து வருகின்றார்.
வடக்கிற்கு செந்தில் தொண்டமானை புதிய ஆளுநராக நியமிக்கவுள்ளதாக அண்மையில் வெளியான தகவல் தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் சாதகமான பதலை வெளியிட்டிருந்தார்.
எனினும் ஜக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான ஜோன் அமரதுங்க மே மாதம் 7 ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய ஆளுநர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்துபோது நியமனம் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.