Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅறிமுகமாகும் புதிய எரிபொருள் வரி - விலையும் அதிகரிக்கும்...!

அறிமுகமாகும் புதிய எரிபொருள் வரி – விலையும் அதிகரிக்கும்…!

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் புதிய எரிபொருள் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த யோசனையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும்.

எதிர்வரும் ஜனவரி – பெப்ரவரி மாதத்திற்குள் எரிபொருளின் விலை உயரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருளுக்கு பாரிய வரி விதிக்கப்படவுள்ளதாலேயே அவர் இந்த விடயத்தை முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களின் விலை அதிகரிப்புடன் நாட்டில் உள்ள அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்.

இதன் காரணமாகவே எரிபொருள் விலையானது விலை சூத்திரத்தின் படி திருத்தம் செய்யப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார். 

பிற செய்திகள்

Recent News