Thursday, January 23, 2025
HomeLatest Newsஇந்திய லார்சென் அண்ட் டூப்ரோ நிறுவனத்திற்கு கிடைத்த புதிய ஏற்றுமதி வாய்ப்பு!

இந்திய லார்சென் அண்ட் டூப்ரோ நிறுவனத்திற்கு கிடைத்த புதிய ஏற்றுமதி வாய்ப்பு!

இந்திய பாதுகாப்பு தயாரிப்பு நிறுவனமான லார்ட்ஸ் அண்ட் டூப்ரோ நிறுவனத்திற்கு புதிதாக இந்தோனேசியாவிற்கு TEEVRA 40 துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்றுமதி வாய்ப்பு கிடைத்துள்ளது.

TEEVRA 40 துப்பாக்கிகள், கடற்படையில் இயங்கும் வகையை சேர்ந்தவையாக உள்ளதோடு, தற்போது இந்தோனேசிய கடற்படை இவற்றிற்காக இந்திய நிறுவனத்தை அணுகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி, இரண்டு தொகுதி TEEVRA 40 வகை துப்பாக்கிகள் இந்தோனேசியா கடற்படைக்கு வழங்கப்பட உள்ளன இவை இந்தோனேஷியாவின் டேலியிக் டுனி வகை கப்பல்களில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தோனேசியா பாதுகாப்பு தயாரிப்பு நிறுவனமான bti, லார்சென் and டூப்ரோ நிறுவனத்துடன் இணைந்து இந்த துப்பாக்களுக்கான விற்பனைக்கு பிற்பாடான பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TEEVRA 40 துப்பாக்கிகள் 3.5km மேற்பரப்பு தாக்குதல் எல்லையைக் கொண்டவை. வானில் 4.5km வரை தாக்குதல் மேற்கொள்ளக்கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News