Tuesday, December 24, 2024
HomeLatest Newsமுன்னாள் கைதிகளுக்கு புதிய பாடத் திட்டம் - சிங்கப்பூரில் ஆரம்பம்!

முன்னாள் கைதிகளுக்கு புதிய பாடத் திட்டம் – சிங்கப்பூரில் ஆரம்பம்!

முன்னாள் சிறைக் கைதிகளுக்கு இணைய, மின்னிலக்கத் திறன்களை வளர்க்கும் நோக்கில் புதிய பாடத் திட்டம் சிங்கப்பூரில் நேற்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த பாட திட்டமானது அக்ரோனிஸ்-ஹெச்சிஎஸ்ஏ கம்பியூட்டர் கிளாஸ்ரூம் என்று கூறப்பட்டுள்ளது.

இது, ஹெச்எஸ்ஏ ஹைபாய்ன்ட் மறுவாழ்வு இல்லம், மஞ்சள் நாடா நிதி, சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு நிறுவனமான அக்ரோனிஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டள்ளது.

திறமையான முன்னாள் கைதிகள் சிலருக்கு மின்னிலக்க அம்சங்களில் தேர்ச்சி குறைவாக இருக்கும் என்பதால் அந்த ஆற்றலை வெளிப்படுத்த அவர்கள் கஷ்டப்பட கூடாது என்பதற்காக இந்தப் பாடத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Recent News