Wednesday, December 25, 2024
HomeLatest Newsவிரைவில் புதிய தொழில் சட்டம் - மனுஷ நாணயக்கார கருத்து..!

விரைவில் புதிய தொழில் சட்டம் – மனுஷ நாணயக்கார கருத்து..!

பல ஆண்டுகள் பழமை வாய்ந்த நாட்டின் தொழில் சட்டத்திற்குப் பதிலாக, நவீன உலகத்திற்கு ஏற்றதும், தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் உரிமைகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் புதிய தொழில் சட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்றைய தினம் (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

´2048 ஆம் ஆண்டில் வெற்றி பெறுவோம் என்ற ஜனாதிபதியின் தொலை நோக்குடனான, நாட்டின் அபிவிருத்தி இலக்கை எட்டும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த சட்ட கட்டமைப்புக்கு தொழில் சங்கங்கள், புத்திஜீவிகள் சமூக அமைப்புக்கள், தொழில் சங்கங்களில் அங்கத்துவம் வகிக்காதவர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளவுள்ளோம்.

இந்த சட்டம் குறித்து நாம் குறிப்பிட்ட போது, வழமை போன்றே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் குறை கூறினர். இவர்கள் எப்பொழுதும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதுடன் அவர்களின் கௌரவத்தையும் பாதுகாத்து, சர்வதேச தொழில் அமைப்பு ஏற்றுக்கொள்க்கொள்ளக்கூடிய புதிய தொழில் சட்டத்தை உருவாக்குவதுடன் தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் பாதுகாப்பு அவர்களின் உரிமை, விசேட தேவைகளை கொண்டுள்ளவர்களின் உரிமையை உறுதி செய்வதும் எமது நோக்கமாகும்.

மே தினத்தில் மாத்திரம் தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் எழுப்பாது அவர்களின் நீடித்த நலனை இலக்காகக் கொண்டும் செயற்படுகின்றோம் என்றார்.

Recent News