இந்திய அரசாங்கத்தினால் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ள யாழ் கலாச்சார மத்திய நிலையமானது தற்போது கூட்டு முகாமைத்துவ குழுவொன்றின் மூலம் நிர்வகிக்கப்படுவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த கூட்டு முகாமைத்துவ குழுவில் யாழ் மாநகர சபையின் முதல்வரும் உறுப்பினராக உள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
கலாச்சார மத்திய நிலையத்தினை இலங்கை மத்திய அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புவதாகவும் அதை யாழ் மாநகர சபையிடம் கையளிப்பதற்கு அவர்கள் தயாரில்லை என்ற கருத்து தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் தான் கலந்துரையாடியதாக தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் இந்தய தூதுவருடனும் கலந்துரையாடியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை நிர்வகிப்பதற்கு ஒரு சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டுமெனவும் அதன் மூலம் இதனை நிர்வகிக்கமுடியுமெ ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்ததாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.