Friday, November 22, 2024
HomeLatest News9 வருஷமா ரயில்ல டிக்கெட் எடுத்ததே இல்ல.. எல்லாம் காவியோட மகிமை - நித்தியானந்தா!

9 வருஷமா ரயில்ல டிக்கெட் எடுத்ததே இல்ல.. எல்லாம் காவியோட மகிமை – நித்தியானந்தா!

9 ஆண்டுகள் ரயில் பயணத்தில் டிக்கெட் எடுத்ததில்லை காரணம் காவி உடை என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

’பதான்’ திரைப்பட பாடலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே காவி நிற உடையில் கவர்ச்சியாக நடித்திருந்தது சர்ச்சையாக வெடித்தது. இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

காட்சிகள் மாற்றியமைக்கப்படவில்லையெனில் மத்தியப் பிரதேசத்தில் இப்படம் திரையிடப்படாது என பாஜக அமைச்சர் கூறியுள்ளார். தொடர்ந்து, மும்பையில் இந்துத்துவ அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

புகாரில் காவி நிறம் தங்களை புண்படுத்தியுள்ளதாகவும் எனவே ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இவ்வாறு காவி உடை குறித்த பேச்சுக்கள் வைரலாகி வருகிறது. இந்நிலையில், கைலாசாவிலிருந்து நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அந்த காலங்களில் நான் காவி உடையில் ரயிலில் பயணம் செய்யும்போது என்னிடம் எந்த டிக்கெட் பரிசோதகரும் வந்து டிக்கெட் இருக்கிறதா? என்று கேட்கமாட்டார். நான் 9 ஆண்டுகள் ரயில் பயணம் செய்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது ஒருமுறை கூட நான் டிக்கெட் எடுத்ததில்லை.

பெரும்பாலும் முன்பதிவில்லாத பெட்டியில்தான் பயணித்திருக்கிறேன். அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் வந்தாலும் என்ன பாபா சாப்பிட்டீங்களா? என்று கேட்பார்கள். சாப்பிட்டேன் என்றால் சரி என சென்றுவிடுவார்கள். இல்லையென்றால் அவர்கள் சாப்பாடு வாங்கி கொடுத்து அனுப்பி விடுவார்கள்.

வட இந்தியாவில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Recent News