Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsநெல்லூர் இன பசு ரூ.40 கோடிக்கு விற்பனை ! உலக சாதனை !!

நெல்லூர் இன பசு ரூ.40 கோடிக்கு விற்பனை ! உலக சாதனை !!

ஆந்திராவில் ஓங்கோல் மற்றும் நெல்லுரை சேர்ந்த சில வகை இன மாடுகள் உலக அளவில் பிரபலமாக உள்ளது.நெல்லூர் இன வகையான பாஸ் இண்டிகஸ் என்ற இன பசு வெளிப்புறத் தோற்றத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும். அதாவது இந்த வகை பசு பிரேசில் நாட்டில் நடந்த ஏலத்தில் 4.8 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.இது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.40 கோடி ஆகும். ரூ.40 கோடிக்கு விற்பனையாகி உலக சாதனை படைத்தது.

நெல்லூர் இன பசுக்கள் கடந்த 1868-ம் ஆண்டு பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு இந்த வகை பசுக்கள் அதிக அளவில் இனவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.அதன்படி பிரேசில் நாட்டில் 1.60 கோடி நெல்லூர் இன பசுக்கள் உள்ளன.இந்த வகை பசுக்கள் அதிக வெப்பத்தை தாங்கக் கூடியவை. எளிதில் நோய்கள் தாக்க முடியாத அளவுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாகும்.

Recent News