Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsநீல் ஆம்ஸ்ட்ராங் தடம் பதித்த இடம் - கண்டுபிடித்தது சந்திரயான்-2 ஆர்பிட்டர்..!

நீல் ஆம்ஸ்ட்ராங் தடம் பதித்த இடம் – கண்டுபிடித்தது சந்திரயான்-2 ஆர்பிட்டர்..!

நிலவில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22 -ந்தேதி சந்திரயான்- 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இதில் இருந்து பிரிந்த தகவல் தொடர்பு கருவியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது.

சுமார் 3 ஆண்டு காலம் நிலவை சுற்றும் இந்த ஆர்பிட்டர் நிலவின் கரடு முரடான நிலப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை புகைப்படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது. 54 ஆண்டுகளுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி முதன் முறையாக நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் தரை இறங்கினார்.

இதன் மூலம் நிலவில் கால் பதித்த முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது அவர் தான் கால் பதித்த இடத்தில் ஒரு கருவியை வைத்தார்.அந்த கருவி தற்போதும் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தை தற்போது சந்திரயான்-2 ஆர்பிட்டர் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Recent News