Sunday, January 26, 2025
HomeLatest Newsநெடுந்தீவு படுகொலை விவகாரம் -படகு சேவைகள் இடைநிறுத்தம்- சம்பவ இடத்திற்கு விரையும் நீதவான்...

நெடுந்தீவு படுகொலை விவகாரம் -படகு சேவைகள் இடைநிறுத்தம்- சம்பவ இடத்திற்கு விரையும் நீதவான் மற்றும் பொலிஸார் !

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்து செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்கு பயணம் செய்வதற்காக குறிக்கட்டுவானுக்கு செல்லவுள்ளனரென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு பெண் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

Recent News