Friday, January 17, 2025
HomeLatest NewsWorld Newsபாகிஸ்தான் பிலாவல் புட்டோ கட்சிக்கு எதிராக புதிய கூட்டணி அமைக்கும் நவாஸ் ஷெரீப் கட்சி..!

பாகிஸ்தான் பிலாவல் புட்டோ கட்சிக்கு எதிராக புதிய கூட்டணி அமைக்கும் நவாஸ் ஷெரீப் கட்சி..!

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தோ்தலில் எதிா்பாராத திருப்பமாக முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி, பிலாவல் புட்டோ ஜா்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளது.


பாகிஸ்தான் நாடாளுமன்றத் தோ்தல் வரும் பிப். 8-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பிஎம்எல்-என் கட்சி தலைமையிலான கூட்டணியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி இருந்த நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தோ்தலில் சிந்து மாகாணத்தில் முத்தாகிதா குவாமி இயக்கம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளதாக பிஎம்எல்-என் கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.


இரு கட்சிகளின் தலைவா்களும் சந்தித்துப் பேசியதையடுத்து இந்த அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்றத் தோ்தலுக்குப் பிறகு தனது கட்சியை ஆட்சியில் அமா்த்துவதற்காக ராணுவத்துடன் நவாஸ் ஷெரீஃப் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகத் தகவல் வெளியானது.


அதிலிருந்து நவாஸின் பிஎம்எல்-என் கட்சிக்கும், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் இடையிலான கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு புதிய கூட்டணியை பிஎம்எல்-என் கட்சி உருவாக்கியுள்ளது.


ஜிடிஏ, ஜியுஐ-எஃப் ஆகிய மேலும் இரு பிரதான கட்சிகளும் பிஎம்எல்-என் கட்சியுடன் ஏற்கெனவே கூட்டணி சோ்ந்துள்ளன. பிஎம்எல்-என் கட்சியின் புதிய கூட்டணிக்குப் பதிலடியாக முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியுடன்
கூட்டணி அமைப்பது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆலோசித்து வருகிறது.

Recent News