Friday, November 22, 2024
HomeLatest NewsWorld Newsபூனையை வைத்து நாசா செய்த செயல்- விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்..!

பூனையை வைத்து நாசா செய்த செயல்- விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்..!

பூமியில் இருந்து 19 மில்லியன் மைல் தொலைவில் இருந்து அதிக தரத்துடன் கூடிய பூனையின் வீடியோவை நாசா வெற்றிகரமாக பூமிக்கு அனுப்பிவைத்துள்ளது.

பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்துள்ள விண்வெளியில் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வு நடவடிக்கைகளில் பல நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் நாசா அதில் முன்னணியில் இருக்கிறது. இந்த நிலையில்,விண்வெளி ஆய்வில் ஒரு புதிய வரலாற்றை நாசா படைத்துள்ளது.

வியாழன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு நடுவில் இருக்கும் ஒரு மர்மமான எரிக்கல்லை ஆய்வு செய்வதற்காக பூமியில் இருந்து 19 மில்லியன் மைல் தூரத்தில் விண்வெளியில் பயணம் செய்துகொண்டிருக்கிற Psyche விண்கலத்தில் இருந்து லேசர் மூலம் முதன்முறையாக 15 விநாடிகள் கொண்ட பூனையின் வீடியோ பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விண்வெளியின் ஆழமான பகுதியில் இருந்தும் பூமிக்கு அதிக தரத்துடன் கூடிய வீடியோவை அனுப்ப முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்த தொழில்நுட்பம், தகவல் தொடர்புக்கு உதவியாக இருக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News