Sunday, January 12, 2025
HomeLatest Newsநாமல் ராஜபக்ஷ வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அதிரடியாக நீக்கம்!

நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அதிரடியாக நீக்கம்!

இலங்கை ரக்பி நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தி முன்னாள் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை ரக்பி நிறுவனமும் அதன் தலைவர் ரிஸ்லி எலியாஸும் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, இந்த மனு தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும் வகையில், மனுவை இம்மாதம் 6ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Recent News