Thursday, January 23, 2025
HomeLatest Newsமீண்டும் இணையும் நாகசைதன்யா- சமந்தா ஜோடி! குஷியில் ரசிகர்கள்

மீண்டும் இணையும் நாகசைதன்யா- சமந்தா ஜோடி! குஷியில் ரசிகர்கள்

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் நாக சைதன்யா, சமந்தாவை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில்  திருமண வாழ்வில் சில பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் காரணமாக இவர்கள் இருவரும் விருப்பப்பட்டு விவாகரத்து செய்ய போவதாக அறிவித்தனர்.இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருந்தது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் தங்கள் படங்களில் பிஸியாக நடித்து வந்தனர். இவ்வாறுஇருக்கையில்  சமந்தா சில நாட்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட அரியவகை நோய் பற்றி இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் ஒன்று போட்டு இருந்தார். மேலும் அதன் மூலம் அவருக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் கஷ்டங்கள் பற்றியும் மனம் உருகி தெரிவித்திருந்தார்.

எனினும் அதை கேள்விப்பட்ட ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் சமந்தாவுக்கு ஆறுதலை கூறி வந்தனர். மேலும் கூடிய விரைவில் சமந்தா இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர். அவரின் இந்த அறிவிப்புக்கு பின்னர்  அவருடைய கொழுந்தனார் அதாவது நாகச் சைதன்யாவின் சகோதரர் அகில் ஆறுதல் கூறியிருந்தார்.

மேலும்  இதைப் பார்த்த பலரும் நாகச் சைதன்யா, சமந்தாவுக்கு ஆறுதல் கூற வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இது பற்றி எந்த கருத்தையும் நாக சைதன்யா தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் ஒரு பிரச்சனை எல்லாம் மறந்துவிட்டு தன் காதல் மனைவியை தேடி சென்றுள்ளார். இந்த செய்தி தான் தற்போது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

Recent News