Wednesday, December 25, 2024
HomeLatest Newsஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நாமல்!

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நாமல்!

தன்னை எதிர்கால ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் தமது கட்சியால் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால ஜனாதிபதி தேர்தலில் என்னை வேட்பாளராக நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

எனினும் பொதுஜன பெரமுன விரைவில் மறுசீரமைக்கப்படும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்துவதற்காகவே கட்சிக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent News