Wednesday, March 12, 2025
HomeLatest Newsமாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல்...!பயணிகள் ஐவரும் உயிரிழப்பு...!

மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல்…!பயணிகள் ஐவரும் உயிரிழப்பு…!

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய நிலையில் தேடப்பட்டு வந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பாகங்கள் சுமார் 1600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்மூழ்கி கப்பல் வெடித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள் ஒரு ‘பேரழிவு வெடிப்பு’ இடம் பெற்றதை உறுதிச்செய்வதாக அமெரிக்க கரையோர காவல்படையின் அதிகாரி ஒருவர் செய்தி மாநாடு ஒன்றில் கூறியுள்ளார்.

டைட்டன் நீர்மூழ்கி கப்பல், கடலின் மேற்பரப்புடனான தொடர்பை இழந்த சிறிது நேரத்திலேயே அமெரிக்க கடற்படை ‘ஒரு வெடிப்புடன் ஒத்துப்போகும் சத்தத்தை’ கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்மூழ்கி கப்பல், கடந்த ஞாயிற்றுக்கிழமை டைட்டானிக் கப்பலின் சிதைவை ஆராய புறப்பட்ட நிலையில் காணாமல் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News