Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஅதிபர் பதவியை இழக்கும் முய்சு? வெடித்த ஊழல் புகார்.. மாலத்தீவில் பெருங்குழப்பம்!!!

அதிபர் பதவியை இழக்கும் முய்சு? வெடித்த ஊழல் புகார்.. மாலத்தீவில் பெருங்குழப்பம்!!!

மாலத்தீவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், அந்நாட்டு அதிபர் முகமது முய்சு மீது இப்போது மிகப் பெரிய ஊழல் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

இப்படி இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே மோசமான உறவே கடந்த சில காலமாக நிலவி வருகிறது. இதற்கிடையே அங்கு அதிபரா உள்ள முய்சு மீது மிகப் பெரிய ஊழல் புகார் ஒன்று இப்போது எழுந்துள்ளது.

இதனால் அவர் தனது அதிபர் பதவியைக் கூட இழக்கலாம் என்று கூறப்படுகிறது.மாலத்தீவில் அதிபர் முறை ஆட்சியில் இருக்கிறது. அங்குக் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் வென்று தான் முய்சு அதிபராகத் தேர்வானார். இந்தச் சூழலில் தான் இப்போது நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதற்கிடையே திங்கள்கிழமை மாலத்தீவு நாணய ஆணையம் மற்றும் மாலத்தீவு போலீஸின் நிதிப் புலனாய்வுப் பிரிவு ஆகியோரின் சீக்ரெட் ஆவணங்கள் இணையத்தில் கசிந்தன. அவை அதிபர் முய்சுவின் ஊழலுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் கூறுகையில், “2018ஆம் ஆண்டு தேதியிட்ட இந்த ஆவணங்கள் அதிபர் முய்சுவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள முறைகேடுகளைக் காட்டுகின்றன.. குறிப்பாக 10 பரிவர்த்தனைகளைக் குறிப்பிடுகிறார்கள். நிதி மோசடி நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றன” என்று அதில் கூறப்பட்டுள்ளது.தான் மேயர் மற்றும் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் இதே குற்றச்சாட்டுகள் எழுந்தன என்று கூறியுள்ள முய்சு, எப்படி பொதுமக்கள் இந்த போலி குற்றச்சாட்டுகளை அப்போது நிராகரித்தாரோ அதேபோல இந்த முறையும் நிராகரிப்பார்கள் என்று முய்சு தெரிவித்துள்ளார்.

மாலத்தீவில் உள்ள 93 இடங்களுக்கு வரும் ஏப்ரல் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை இடங்களைப் பிடித்தால் முய்சுவுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News