அமெரிக்காவிடம் இருந்து 31 MQ-9B ட்ரோன்களை வாங்க ‘கோரிக்கை கடிதம்’ தயாரிக்கும் இறுதிக் கட்டத்தில் இந்தியா உள்ளது. கொள்முதல் விவரங்களை கோடிட்டுக் காட்டும்குறித்த கோரிக்கை கடிதம் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரோன்களில் உள்நாட்டு உள்ளடக்கத்தை அதிகரிப்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது .அந்த வகையில் குறித்த ட்ரான்களை உள்நாட்டில் இணைக்க திட்டமிட்டுள்ளது. ட்ரோன்கள் உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு திறன்களை மேம்படுத்தும் மற்றும் மூலோபாய இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை செயல்படுத்தும்.இந்த நிலையில் இந்திய ஆயுத பலத்தை அதிகரிக்கும் இந்த ட்ரோன்களின் மதிப்பிடப்பட்ட செலவு $ 3,072 மில்லியன் ஆகும், இது அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டு தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.