Tuesday, December 24, 2024
HomeLatest Newsமூதூரில் மோட்டார் குண்டுகள் மீட்பு! (படங்கள் இணைப்பு)

மூதூரில் மோட்டார் குண்டுகள் மீட்பு! (படங்கள் இணைப்பு)

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலத்தடிச்சேனை பகுதியில் உள்ள தனியார் காணியிலிருந்து இன்று சனிக்கிழமை (25) காலை RPG ரக மோட்டார் குண்டுகள் 06 கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்னும் குண்டுகள் இருக்கக்கூடுமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணியானது யுத்த காலத்தில் இரானுவ முகாமாக இருந்து பின்னர் காணி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த காணிச் சொந்தக்காரர் வீட்டு நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது வெடி பொருட்கள் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த இடத்திற்கு மூதூர் பொலிஸார், இரானுவத்தினர் இன்று பகல் வருகை தந்து புதைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களை பார்வையிட்டதுடன் மூதூர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அகழ்வுப்பணியை மேற்கொண்டு குண்டுகளை மீட்கவுள்ளனர்.

அத்தோடு குறித்த இடத்தில் இன்னும் குண்டுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recent News