Tuesday, January 28, 2025
HomeLatest Newsதாயாரின் 10 நாள் சுற்றுலாப் பயணம்..!வீட்டில் தனியாக தவித்த 16 மாத குழந்தை..!நேர்ந்த சோகம்..!

தாயாரின் 10 நாள் சுற்றுலாப் பயணம்..!வீட்டில் தனியாக தவித்த 16 மாத குழந்தை..!நேர்ந்த சோகம்..!

இளம் தாயொருவர் குழந்தையை வீட்டில் தனியாக தவிக்க விட்டு சுற்றுல்லா சென்ற நிலையில் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டின், ஒகியோ மாகாணத்தை சேர்ந்த 31 வயதான கிறிஸ்டல் கேன்டலாரியோ பெண்ணே இவ்வாறு தனது 16 மாத பெண் குழந்தையை தனியாக விட்டு சென்றுள்ளார்.

அவர், குழந்தையை வீட்டில் தனியாக தவிக்க விட்டு 10 நாட்கள் சுற்றுலா சென்றதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், சுற்றுலா முடித்து வீடு திரும்பிய அந்தப் பெண் குழந்தை மூச்சு பேச்சின்றி இருந்தமையால் மருத்துவ உதவியாளர்களை அழைத்துள்ளார்.

அந்த அடிப்படையில் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு விரைந்த அவர்கள் குழந்தை இறந்து கிடந்ததை உறுதி செய்ததுள்ளனர்.

அத்துடன், குழந்தையின் படுக்கையில் மலம், சிறுநீர் இருந்ததை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கேன்டலாரியோவை கைது செய்துள்ளனர்.

மேலும் கிறிஸ்டல் கேன்டலாரியோ, அடிக்கடி குழந்தையை வீட்டில் தனியாக விட்டு செல்வதை வழக்கம் என்றும், பல முறை கூறியும் அவர் கேட்கவில்லை என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளார்.

Recent News