Thursday, January 23, 2025
HomeLatest Newsமலேசியாவின் அன்னை தெரேசா உயிரிழப்பு..!சோகத்தில் மூழ்கிய மக்கள்..!

மலேசியாவின் அன்னை தெரேசா உயிரிழப்பு..!சோகத்தில் மூழ்கிய மக்கள்..!

மலேசியாவின் அன்னை தெரேசா உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மலேசியாவின் அன்னை தெரசா என்று அழைக்கப்படும் மதர் மங்களம் என்பவரே உடல்நலக் குறைவு காரணமாக தனது 97ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

மலேசியாவின் புச்சோங்கில் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பியோர் லைஃப் சொசைட்டி என்ற ஆதரவற்ற மற்றும் ஆதரவற்றோருக்கான சமூக சேவை அமைப்பின் வாழ்நாள் தலைவராக பணியாற்றியுள்ளார்.

அத்துடன், மலேசிய மதங்களுக்கு இடையிலான அமைப்பின் துணைத் தலைவராகவும், வளர்ச்சியில் பெண்களை ஒருங்கிணைப்பதற்கான தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அந்த வகையில் அவரது மனிதாபிமான பணிகளின் அடிப்படையில் மலேசியாவின் அன்னை தெரேசா என்று அழைக்கப்பட்டார்.

இவர் மூச்சுக் குழாய் நிமோனியாவுக்காக இரண்டு வாரங்களுக்கு முன்னர் அசுண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயினும், சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை உயிரிழந்துள்ள நிலையில் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Recent News