Tuesday, December 24, 2024
HomeLatest Newsகூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்! இதற்காக தானா?

கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்! இதற்காக தானா?

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கார் பிரபல பொலிவூட் நடிகையான சுஷ்மிதா சென்.

புகழ்பெற்ற தேடுபொறி தளமான கூகுள் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட படங்கள், நடிகைகள், நட்சத்திரங்கள் பற்றிய டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இந்த ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் நடிகை சுஷ்மிதா சென் இடம்பெற்றுள்ளார்.

இவர் முன்னாள் உலக அழகி ஆவார். மேலும் இவர் ‘தாலி’ படத்தில் திருநங்கை மற்றும் சமூக ஆர்வலர் கௌரி சாவந்தின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சுஷ்மிதா. இது தவிர, ராம் மத்வானியின் ‘ஆர்யா 3’ படமும் அவரது கைவசம் உள்ளது.

இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு தேடிய காரணம் சுஷ்மிதா சென்னும், முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியும் டேட்டிங் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது தான்.

அந்த புகைப்படங்கள் வெளியான சமயத்தில் அவர்கள் இருவரும் காதலிப்பதாக நிறைய தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

இவ்வாறு பரவிய இந்தத் தகவல் உண்மையா என்பதை அறிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் ஏராளமானோர் கூகுளில் தேடியுள்ளனர்.

அதனால் தான் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் சுஷ்மிதா சென் இடம்பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் 4ஆவது இடத்தில் லலித் மோடியும், 5ஆவது இடத்தில் சுஷ்மிதா சென்னும் உள்ளனர்.

பட்டியலின் வரிசை
குறிப்பிட்ட தேடுதல் பட்டியலின் படி பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.

இந்த பட்டியலில் இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரெளபதி முர்மு இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர்ந்தும் 3ஆம் இடம் முதல் 10 ஆம் இடம் வரை பட்டியலில் இடம்பெற்றவர்கள்

  • நுபுர் சர்மா
  • திரௌபதி முர்மு
  • ரிஷி சுனக்
  • லலித் மோடி
  • சுஷ்மிதா சென்
  • அஞ்சலி அரோரா
  • அப்து ரோசிக்
  • ஏக்நாத் ஷிண்டே
  • பிரவின் தம்பே
  • ஆம்பர் ஹார்ட்

Recent News