Thursday, January 23, 2025
HomeLatest NewsMost Boring Season! பிக்பாஸில் கமல் கொடுத்த அதிரடி வழக்கு

Most Boring Season! பிக்பாஸில் கமல் கொடுத்த அதிரடி வழக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் Safe கேம் விளையாடிய நிலையில், கமல்ஹாசன் அனைத்து போட்டியாளர்களையும் கடுமையாக சாடியுள்ளார்.

பிக்பாஸ் வீடு கடந்த வாரம் நீதிமன்றமாக மாறியுள்ள நிலையில், போட்டியாளர்கள் பலரும் சக போட்டியாளர்கள் மீது புகார் கொடுத்தனர்.

புகார்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், கடைசியில் பிக்பாஸ் ஒரு பொதுநல வழக்கு ஒன்றினை கொடுத்தார்.

அதாவது உள்ளே இருக்கும் போட்டியாளர்கள், சாப்பிட்ட தட்டு, டீ குடித்த டம்ளர் இவை கழுவாமல் ஆங்காங்கே இருந்ததால் பிக்பாஸ் இந்த வழக்கை கொடுத்தார்.

இதனை விசாரித்தவர்கள், குற்றவாளிகள் யார் என்றே விசாரிக்காமல், மேலோட்டமாகவே செயல்பட்டு வழக்கினை முடித்தனர்.

இதில் குற்றவாளியான போட்டியாளர்களை கமல் வெளிக்கொண்டு வந்த நிலையில், தற்போது கமல் வழக்கு ஒன்றினை கொடுத்துள்ளார்.

என்னுடைய வழக்கு இவ்வளவு பாதுகாப்பா விளையாடினால் Most Boring சீசனாக இது மாறும் என்று சரமாரியாக பேசியுள்ளார்.

Recent News