Saturday, December 28, 2024
HomeLatest Newsஅரசியல் நெருக்கடியை விட, உணவு நெருக்கடி அதிகரிக்கும்! முக்கியஸ்தர் எச்சரிக்கை

அரசியல் நெருக்கடியை விட, உணவு நெருக்கடி அதிகரிக்கும்! முக்கியஸ்தர் எச்சரிக்கை

விதை நெல் உற்பத்திக்கு தேவையான வசதிகளுடன் எரிபொருள் மற்றும் உரம் ஆகியன விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லையெனில் அரசியல் நெருக்கடியை காட்டிலும், உணவு நெருக்கடி அதிகரிக்கக்கூடும் என முன்னாள் விவசாய பணிப்பாளர் நாயகம் கே. பி குணரட்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக, அடுத்த போகத்திற்கு தேவையான விதை நெல்லை உற்பத்தி செய்வதற்கு இயலாமல் போயுள்ளது.

எனவே, இந்தவிடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை வழங்க முன்வர வேண்டும்.

இந்த பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடிக்குமானால் அரசியல் நெருக்கடியை காட்டிலும் உணவு நெருக்கடி நாட்டில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என முன்னாள் விவசாய பணிப்பாளர் நாயகம் கே.பி குணரட்ன குறிப்பிட்டுள்ளார்.

Recent News