உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷிய ராணுவம் தாக்கியது.
கடந்த சில நாட்களாக உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க ரஷியா டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருகின்றது.
உக்ரைன் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை ரஷியா அழித்துள்ளது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் 60 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இன்னும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
பெரும்பாலான பகுதிகளில் (உக்ரைனின்) மற்றும் கியேவில் இருட்டடிப்பு தொடர்கிறது. மொத்தத்தில், 60 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்வெட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது பாதியாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.