Tuesday, December 24, 2024
HomeLatest Newsஒன்றுடன் ஒன்று மோதிய 400க்கும் மேற்பட்ட வாகனங்கள்! வைரல் காணொளி

ஒன்றுடன் ஒன்று மோதிய 400க்கும் மேற்பட்ட வாகனங்கள்! வைரல் காணொளி

சீனாவில் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் காணொளி வைரலாகி வருகிறது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜெங்ஜவ் நகரில் உள்ள பாலம் ஒன்றில் இன்று (28-12-2022) காலை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றின் மேல் மற்றொன்று நிற்கும் வகையிலான விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், கார்கள், லாரிகள் என 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி கொண்டன. குளிர்கால சூழலை முன்னிட்டு காலையில் தெளிவற்ற வானிலை காணப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து தீயணைப்பு துறையை சேர்ந்த 11 தீயணைப்பு வாகனங்களும், 66 வீரர்களும் உடனடியாக அந்த பாலத்திற்கு சென்றுள்ளனர்.

பலர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். அவர்கள் வாகனங்களுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இதுபற்றிய காணொளியும் வைரலாகி வருகிறது.

Recent News