Tuesday, December 24, 2024
HomeLatest News40 இற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் அரசை விட்டு வெளியேறினர்!

40 இற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் அரசை விட்டு வெளியேறினர்!

அரசாங்கத்தின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கப் போவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

11 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனியான சுயேட்சை குழுவாக தங்களை பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

16 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனி சுயேட்சை குழுவாக தங்களை பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனியான சுயேச்சைக் குழுவாக தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Recent News