Friday, November 15, 2024
HomeLatest Newsஇந்தியா மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் மோதலில் 12 க்கு மேற்பட்டோர் பலி….!

இந்தியா மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் மோதலில் 12 க்கு மேற்பட்டோர் பலி….!

இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று துணை இராணுவம் மற்றும் காவற்துறைப் பாதுகாப்புடன் ஆரம்பமான நிலையில் ஆரம்பித்த சில நிமிடங்களிலே வன்முறைச் சம்பவங்கள் வெடித்துள்ளன.

குறித்த தேர்தல் ஜீலை 8 ம் திகதி.இடம்பெறுமென கடந்த மாதம் மாநில தேர்தல் வெளியிடப்பட்டதிலிருந்தபல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந் நிலையி்ல் இதுவரை ஏற்பட்ட. வன்முறை மோதல்களி்ல் 12 வயது சிறுவன் உட்பட 12 க்கும் அதிகமானோ் பலியாகியுள்ளனர்.

இத் தேர்தலில் ஆளும் திரிணாமூல் கா்கிரஸ் கட்சி , பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகளிடையே கடும் போட்டி நிலவி.வருகையில் இத் தேர்தலில் 5.67 கோடி.வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந் நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்குமிடேயே ஏற்பட்டமோதலில் காங்கிரஸ் தொண்டர் அர்விந்தோ மொண்டல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இக் கொலையைத் தொடர்ந்தே வன்முறை வலுப்பெற்றுள்ளது.

இதனையடுத்து இன்று 65000 துணை ராணுவப் படையினர் மற்றும் மாநில காவற்துறை சார்பில் 70000 காவற்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேர்தல் ஆரம்பமாகியிருந்தும் சில மணி நேரத்தில் கூச்பெகார் மாவட்டத்தில் வன்முறை பதிவாகியுள்ளமை குறி்பிடத்தக்கது.

Recent News