அம்பகமுவ பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலாங்கொடை பிரதேசத்திலும் பல விவசாய காணிகளில் குரங்குகள் உணவுப்பயிர்களை அழித்து வருவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பல பிரதான நகரங்களை அன்டிய பகுதியில் அதிகமாக இவ்வாறு குரங்கு தொல்லை அதிகரித்து உள்ளதாக பிரதேச மக்ககள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நல்லதண்ணி, மஸ்கெலியா,நோட்டன், கினிகத்தேன ஹங்கராம்பிட்டி கிரிவன்னெலிய லக்சபான, பொல்பிட்டிய மற்றும் பலங்கொட பிரதேசத்தில் உள்ள இம்புல்பே, அலுத்நுவர ,பெலிஹுல்ஓய, பம்பஹின்ன தென்ன, தியவின்ன வெலிஓய, கல்தோட்டை உட்பட பல பி ரதேசங்களிலும் மரக்கறி, பழவகை, சேனைப்பயிர்செய்கைகளை குரங்குகள் அழித்து வருவதாக தெரிவிக்கும் கிராம மக்கள் இது தொடர்பில் வனஜீவராசி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குரங்குகள் உணவுப்பயிர்களை நாசம் செய்வது மட்டுமன்றி இவற்றின் செயற்பாடுகள் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிப்படையச் செய்வதுடன் இவை வீடுகளை ஆக்கிரமித் து உணவு பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கும் சேதத்தை விளைவிப்பதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.