Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஎக்ஸ் செயலியில் விரைவில் பண பரிமாற்றம் - எலான் மஸ்க் அதிரடி..!

எக்ஸ் செயலியில் விரைவில் பண பரிமாற்றம் – எலான் மஸ்க் அதிரடி..!

டுவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கி உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க், அதுமுதல் ஆட்குறைப்பு, எக்ஸ் என பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், `எக்ஸ் செயலி மூலம் மற்றவர்களுக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்’ எனக் கூறியுள்ளார்.

Recent News