இலங்கையின் பனங் கள்ளு மற்றும் தென்னம் கள்ளு என்பன கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பொருளாதார நிலைப்படுத்தல் உபகுழுவின் கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்த தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது சுங்கத்திணைக்களம், கலால் வரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர்.
அங்கு கருத்து வெளியிட்ட கலால் வரித் திணைக்கள அதிகாரிகள்,
தற்போது இலங்கையில் எத்தனோல் உற்பத்தி தேவையை விட மேலதிகமாக உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் தயாரிப்புகளான பனம் கள், தென்னம் கள் என்பவற்றை கனடாவுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.