Tuesday, December 24, 2024
HomeLatest Newsமோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

ரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

99 வயதான ஹீரா பென்னிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக உள்ளதாக, அம்மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குஜராத்திற்கு வருகை தந்த பிரதமர், மருத்துவமனைக்கு சென்று, தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பிரதமரின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனையடைந்ததாகவும், அவர் நலம்பெற விழைவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recent News