Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsமோடி கடவுளுக்கே அமர்ந்திருந்து பாடம் எடுப்பார்..!ராகுல் காந்தி நையாண்டி..!

மோடி கடவுளுக்கே அமர்ந்திருந்து பாடம் எடுப்பார்..!ராகுல் காந்தி நையாண்டி..!

பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றது என்பது தொடர்பாக பிரதமர் மோடி, கடவுளுக்கே பாடம் எடுப்பார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சாண்டா கிளாராவில் இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் சார்பில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் பேசிய போதே பிரதமர் மோடியை இவ்வாறு கிண்டல் செய்துள்ளார்.

எந்த ஒரு மனிதரும், அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இந்த உலகம் மிகவும் பெரியது. ஆனாலும் இந்தியாவில் தமக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று நினைக்கும் ஒரு குழுவினரும் உள்ளனர்.

அது மட்டுமன்றி, அவர்கள் கடவுளை விட தமக்கு அதிகமாகத் தெரியும் என்றும் அவர்கள் கடவுளுடன் அமர்ந்து உலகில் என்ன நடக்கின்றது என்று விளக்குவார்கள் என்றும் இதற்கு எங்கள் பிரதமர் சரியான உதாரணம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடியை கடவுளுடன் அமர வைத்தால், இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றது என்பது குறித்து கடவுளுக்கே பாடம் எடுப்பார். அதனால் கடவுள் தான் படைத்தது என்ன என்றே குழம்பி விடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் எதையும் காது கொடுத்துக் கேட்பதற்கு தயாராக இல்லை என்பதே அதன் மைய பொருள் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக இவரது பேச்சினை அங்கிருந்து கேட்டுக்கொண்டு இருந்தவர்களை ராகுல் காந்தி நகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Recent News