Thursday, December 26, 2024
HomeLatest Newsசீனாவில் நவீன அடிமைத்தனம்! அம்பலப்படுத்திய ஐ.நா. சபை

சீனாவில் நவீன அடிமைத்தனம்! அம்பலப்படுத்திய ஐ.நா. சபை

சீனாவின் “சின்ஜியாங்” என்னும் பிராந்தியத்தில் வாழும் சிறுபான்மையின மக்கள் சீன அதிகாரத்தின் கீழ் நவீன அடக்கு முறைகளுக்குட்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 20 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சீனாவின் “சின்ஜியாங்” என்னும் பிராந்தியத்தில் வாழ்கின்ற ‘உய்குர்’, ‘கசாக்’ உட்பட மேலும் பல சிறுபான்மை இன மக்கள் பலவித அடிமைத்தனங்களுக்குட்பட்டு இருப்பதாகவும், பாலியல் கொடுமை மற்றும் அவர்களது தனிமனித சுதந்திரங்கள் என்பன முற்றாக இழக்கப்பட்ட நிலையில் வாழ்வதாகவும், கல்வி ஒழிக்கப்பட்டு கட்டாய விவசாயம், மீன்படி போன்ற கட்டாய தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் இவ்வாறான நிலையில் சுமார் 1.8 மில்லியன் சிறுபான்மை இன மக்கள் சீனாவில் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News