தைவான் இன்று அதிகாலை தரை மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகள் கடற்படைப் படைஆயுதங்களை பயன்படுத்தி தனது வான் பாதுகாப்புகளை சோதித்தது,அருகிலுள்ள சீனாவின் அடிக்கடி இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்வதில் தேர்ச்சிபெற பயிற்சியை தீவிரப்படுத்துவதாகக் மேலும் கூறியது.
சீனா தனது சொந்த பிரதேசம் என்று கூறும் தைவான், கடந்த நான்கு ஆண்டுகளில் சீன விமானப்படை விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் தீவுக்கு அருகில் மற்றும் அதைச் சுற்றி இயங்குவதாக மீண்டும் மீண்டும் புகார் அளித்து வந்துள்ளது .இந்நிலையில் தமது இறையாண்மையினை தாமே பாதுக்காக்க முடிவு செய்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்
தைவானின் விமானப்படை கட்டளை ஒரு சுருக்கமான அறிக்கையில், உள்ளூர் நேரப்படி காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்கை வில் மற்றும் அமெரிக்கா தயாரித்த பேட்ரியாட் போன்ற விமான ஏவுகணைகளைப் பயன்படுத்தி “ஒட்டுமொத்த வான் பாதுகாப்பு போர் திட்ட பயிற்சிகளை” மேற்கொண்டதாக கூறியுள்ளது
.
“சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் தைவானின் சுற்றியுள்ள கடல் மற்றும் வான் இடத்திற்குள் அடிக்கடி ஆக்கிரமிப்பதை எதிர்கொண்டு, சாத்தியமான அச்சுறுத்தல்களைச் சமாளிக்க விமானப்படை தொடர்ந்து தனது பயிற்சி தீவிரத்தை அதிகரிக்கும்” என்று விமானப்படை தெரிவித்துள்ளது.