Monday, January 27, 2025
HomeLatest NewsWorld Newsகருப்பு நாய் 2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக மாறிய அதிசயம்..!!

கருப்பு நாய் 2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக மாறிய அதிசயம்..!!

அரிதான நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் 2 ஆண்டுகளில் முழுவதும் வெள்ளையாக மாறி உள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .அதாவது தோல் அதன் இயற்கையான நிறத்தை இழந்து வெளிறிய வெள்ளை நிறமாக மாறும் நிலைக்கு விட்டிலிகோ என்று பெயர். இந்த வகை அரிய நோயால் சில மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியை சேர்ந்த ஸ்மித் என்பவர் வளர்த்து வரும் பஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த 4 வயது நாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்தது. இந்நிலையில் விட்டிலிகோ பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நிறம் படிப்படியாக மாறி தற்போது முழுவதும் வெள்ளை நிறமாகி உள்ளது.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறமை குறிப்பிடத்தக்கது..

Recent News