Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia News24 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை-வியப்பில் மருத்துவ உலகம்!

24 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை-வியப்பில் மருத்துவ உலகம்!

அரசு மருத்துவமனையில் 24 விரலுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளமை மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜாகித்யாலயா மாவட்ட கோருட்ல அரசு மருத்துவமனையிலே இந்த வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பில் தெரிய வருகையில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள ஏற்காட்டை சேர்ந்த ரவாலி என்ற பெண்ணுக்கு பிரசவலி ஏற்பட்டதை தொடர்ந்து குறித்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதே கர்ப்பிணி திங்கட்கிழமை அதிகாலை ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். பிறந்த குழந்தைக்கு மொத்தமாக 24 விரல்கள் இருந்துள்ளன.

குழந்தைக்கு இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகளிலும் ஆறு விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்ததை மருத்துவர்கள் கண்டு விரைந்துள்ளனர்.

இவ்வாறாக 24 விரல்களுடன் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் திரண்டுள்ளது.

Recent News