Tuesday, January 28, 2025
HomeLatest Newsசர்வகட்சி ஆட்சியமைந்ததும் அமைச்சர்கள் பதவிவிலகுவார்கள்! பிரதமர் அதிரடி 

சர்வகட்சி ஆட்சியமைந்ததும் அமைச்சர்கள் பதவிவிலகுவார்கள்! பிரதமர் அதிரடி 

சர்வகட்சி அரசு அமைந்ததும், தமது அமைச்சு பதவிகளில் இருந்து விலக தயாரென அனைத்து அமைச்சர்களும் தெரிவித்ததாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலில்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (11) காலை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.

சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டவுடன் அந்த அரசாங்கத்திடம் தமது பொறுப்புக்களை ஒப்படைக்கத் தயார் என கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர்கள் அனைவரும் கருத்து வெளியிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வகட்சி ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வழிவகை செய்யும் வகையில் பெருமளவிலான அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Recent News