Saturday, March 15, 2025
HomeLatest Newsவரி அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வரி அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அதிகரிக்கப்பட்டுள்ள வரி மறுசீரமைப்பு மூலம் அரச வருமானத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் தொடர்பில் முறையான மதிப்பீடு ஒன்றை எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் பின்னரே வரி அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிதித்துறை மறுசீரமைப்பை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ள போதிலும் அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளையும் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Recent News