நாட்டில் நிலவி வரும் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டாயிரம் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு பேக்கரிகள் மூடப்பட்டதால் சுமார் இரண்டு இலட்சம் பேர் தொழில்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.
இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையினால் நாட்டில் பாண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
டொலர் இல்லாத காரணத்தினால் நாடு முழுவதிலும் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் சுமார் ஏழாயிரம் பேக்கரிகள் காணப்பட்டதாகவும், ஏற்கனவே இரண்டாயிரம் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பணியாற்றியவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.