Friday, January 24, 2025
HomeLatest Newsஒரே நாளில் கோடீஸ்வரர்! யாரும் வெல்லாத பணத்தை வென்றெடுத்த நபர்

ஒரே நாளில் கோடீஸ்வரர்! யாரும் வெல்லாத பணத்தை வென்றெடுத்த நபர்

கடந்த திங்கட்கிழமை பாரிஸில் இடம்பெற்ற Loto சீட்டிழுப்பில் 25 மில்லியன் யூரோக்கள் பணத்தினை நபர் ஒருவர் வெற்றியீட்டியுள்ளார்.

இந்நிலையில் 9, 17, 24, 36 மற்றும் 45 ஆகிய ஐந்து இலக்கங்களை சரியாக கணித்து, நபர் ஒருவர் 25 மில்லியன் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதியில் இருந்து சீட்டிழுக்கப்பட்டு வரும் இத்தொகையினை, அதுவரை எவரும் வெற்றி பெறாத நிலையில், தற்போது பரிஸைச் சேர்ந்த ஒருவருக்கு அதிஷ்டம் அடித்துள்ளது.

Loto சீட்டிழுப்பில் 25 மில்லியன் பரிசுத்தொகை வெல்வது வரலாற்றில் இது மூன்றாவது முறையாகும்.

இதற்கு முன்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் Brittany தீவைச் சேர்ந்த ஒருவர் 30 மில்லியன் யூரோக்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News